கலைஞரின் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி

கலைஞரின் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாயுடு மஹாலில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் பேச்சுப் போட்டியை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள நாயுடு மஹாலில் திமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இடையிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பேச்சு போட்டியில், என்றென்றும் பெரியார் ஏன், அண்ணா கண்ட மாநில சுயாட்சி, கலைஞரின் தொலைநோக்கு பார்வை, மானமிகு சுயமரியாதைகாரர் கலைஞர், கலைஞர் நவீன தமிழ்நாட்டின் சிற்பி, இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், சமூக நீதி காவலர் கலைஞர், தமிழ்நாட்டில் குடும்பங்களில் திமுக, பேசி வென்ற இயக்கம், திராவிட மாடல் நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 10 தலைப்புகளின் கீழ் பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக திமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி உமாபதி, புதுக்கோட்டை விஜயா, சிவ ஜெயராஜ், மதிமாறன், மில்டன், இந்திரகுமார் பங்கேற்றனர் முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ . பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேச்சுப் போட்டியில் சிறப்பாக பேசிய 34 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் வெற்றி பெற்றவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும், சிறப்பு பரிசு, கலைஞரும் நானும் புத்தகம், மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவப் படுத்தினார்.
Next Story