வைணவ கோயில்களில் சிறப்பு பூஜை

வைணவ கோயில்களில் சிறப்பு பூஜை
திண்டுக்கல்‌ ஸ்ரீ ரூப கிருஷ்ணன் திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வைணவ கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியை கோகுல அஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி விழாவாக வழிபாடு செய்வது வழக்கம். அதன் அடிப்படையில் திண்டுக்கல்லில் ஸ்ரீ ரூப கிருஷ்ணன் திருக்கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திருமஞ்சன பொடி, மஞ்சள் பொடி, சந்தானம் பொடி , இளநீர் அரிசி மாவு பால் தயிர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பள்ளி மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர். இதே போல் யாதவ மேட்டு ராஜாக்கப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், எம் வி எம் நகர் தென்திருப்பதி கோயில், மலை அடிவார சீனிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து வைணவம் கோவில்களிலும்சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
Next Story