புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அமைச்சர் வழங்கினார்
Dindigul King 24x7 |26 Aug 2024 4:07 PM GMT
ஒட்டன்சத்திரம் காமாட்சி திருமண மண்டபத்தில் பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வழங்கினார்
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் ஒட்டன்சத்திரம் காமாட்சி திருமண மண்டபத்தில் பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 52,794 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டைகோரி பெறப்பட்ட 8,858 விண்ணப்பங்களில் 3,933 விண்ணப்பங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் இதுவரை 7,704 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டைகோரி பெறப்பட்ட 1,039 விண்ணப்பங்களில் 857 விண்ணப்பங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் வட்டத்தில் புதிய குடும்ப அட்டைகோரி பெறப்பட்ட 689 விண்ணப்பங்களில் 502 விண்ணப்பங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. சரிபார்ப்பு பணி முடிவடைந்தவர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அய்யம்மாள், ஒட்டன்சத்திரம் நகர்மன்ற துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதீஸ்வரன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story