கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்... மிதி படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்... நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களை காண அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், உதகை படகு இல்லம், ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை காரணமாக உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உதகையில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான படகு இல்லத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. படகு இல்லத்தில் மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகுகளில் சவாரி செய்து வார விடுமுறையை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கொண்டாடினர்.
Next Story