டோல்கேட்டில் மாதாந்திர கட்டணம் குறைப்பு

டோல்கேட்டில் மாதாந்திர கட்டணம் குறைப்பு
குறைப்பு
கள்ளக்குறிச்சி டோல்கேட்டில் பலமுறை பயணிக்கும் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் குறைக்கப்பட்டு, செப்., 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் மேற்கு பகுதியில் டோல்கேட் அமைத்து வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்த சாலை வழியாக அடிக்கடி செல்லும் கார், பஸ், கனரக லாரி உள்ளிட்ட வாகனங்கள், மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் செலுத்தி 'பாஸ்' பெற்றுள்ளது. இந்த மாதாந்திர 'பாஸ்' கட்டணம் குறைக்கப்பட்டு செப்., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஒரு நாளில் ஒரு முறையும், பல முறையும் பயணிக்கும் கட்டணத்தில் எவ்வித மாற்றமில்லை.அதன்படி, கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணமாக இதுவரை ரூ.1,945 வசூலிக்கப்பட்ட நிலையில், ரூ.15 குறைத்து செப்., 1ம் தேதி முதல் ரூ.1,930 வசூலிக்கப்பட உள்ளது. அதேபோல், (அடைப்புக்குறிக்குள் பழைய கட்டணம்) இலகுரக வாகனங்களுக்கு (3,405) ரூ.25 குறைத்து ரூ.3,380 ஆகவும், டிரக், பஸ் (6,810) ரூ.50 குறைத்து ரூ.6,760 ஆகவும், கனரக வாகனங்கள் (10,945) ரூ.80 குறைத்து செப்., 1ம் தேதி முதல் ரூ.10,865 வசூலிக்கப்பட உள்ளது.
Next Story