தி.மு.க., உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

X
முகையூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஆலம்பாடியில் நடந்தது.விழுப்புரம் தெற்கு, முகையூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஆலம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.ஒன்றிய அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் கற்பகம் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒவ்வொரு கிளையிலும் சிறப்பாக கொண்டாடுவது, சென்னையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திரளாக பங்கு பெறுவது, தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்வது, மகளிர் அணி உறுப்பினர்கள் சேர்க்கையில் உதவுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய நிர்வாகிகள் பிரேமா அல்போன்ஸ், லூயிஸ், கண்ணன், ஜெகன், ஏழுமலை, சாந்தகுமார், இளஞ்செழியன், கோபால், வீரமணி, தனலட்சுமி உமேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

