மார்க்கெட் சாலையில் தடுப்புகள்!

மார்க்கெட் சாலையில் தடுப்புகள்!
தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் ஜெயராஜ் ரோடு சந்திப்பு பகுதியில் காமராஜர் காய்கறி மார்க்கெட் அமைந்து உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த மார்க்கெட்டுக்கு வரும் மக்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இந்த பகுதி நகரின் முக்கிய சந்திப்பு பகுதியாக இருப்பதால், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் இந்த வழியாக செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், சாலையோரம் வாகனங்களை நிறுத்தாத அளவுக்கு தடுப்புகள் அமைத்து, அதில் கயிறு கட்டப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை தடுப்புகளுக்கு உட்புறமாக விடுவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். போக்குவரத்து போலீசாரும் கண்காணித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி பெரிதும் அடைந்து உள்ளனர்.
Next Story