ராமநாதபுரம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என பேரணி நடைபெற்றது.
Ramanathapuram King 24x7 |27 Aug 2024 3:09 AM GMT
ராமநாதபுரம் தவ்ஹீத் ஜமாத்தின் (தெற்கு) மாவட்ட கிளையின் சார்பாக மதுவுக்கு எதிரான பேரணி நடைபெற்றது.
ராமநாதபுரம் தவ்கீத் ஜமாத்தின்(தெற்கு) மாவட்ட கிளையின் சார்பில் பாரதி நகர் முடிய பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என வரிசையாக பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி பேரணியாக வந்தனர். இப்பேரணி சந்தை திடல் அருகே உள்ள அண்ணா சிலைலிருந்து பாரதிநகர், பாரிஆலிம் பள்ளிவாசல் வரை மது மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படும் வண்ணம் மாவட்ட தலைவர் இபுறாகிம்ஸாபிர் தலமையில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 1000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் திணாஜ்கான் போதையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து உரையாற்றினார்.
Next Story