மாவட்ட அளவிலான ரொபாடிக் போட்டிகள்
Dindigul King 24x7 |27 Aug 2024 3:20 AM GMT
திண்டுக்கல் விருதுநகர் நாடார் உறவின்முறை மஹாலில் மாவட்ட அளவிலான ரொபாடிக் போட்டிகள் - நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள விருதுநகர் நாடார் உறவின்முறை மஹாலில் ரோபோ பெஸ்ட் 2024 போட்டிகள் நடைபெற்றது. ரோபோடிக் எவ்வாறு எளிமையாக செய்வது என்பது குறித்து சிறு வயது மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. தற்போது இயங்கி வரும் இயந்திரங்கள் இனிவரும் காலங்களில் தானியங்கியாக மாறி வரும் சூழ்நிலை உள்ளது அதற்கு ஏற்ப மாணவர்கள் அதனை புரிந்து செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கில், நகர் மற்றும் கிராமப்புற மாணவர்களும் எளிதாக கற்றுக்கொள்ள இதுபோன்ற ரொபாட்டிக் போட்டிகள் நடத்தப்படுவதாக தெரிவித்தனர் இதில் மாணவர்கள் தானியங்கி ட்ராலி மாடல் செய்துள்ளனர். அதன் செயல்திறன் குறித்து விளக்கம் அளித்தனர். மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட போர்டில் ரோபோட்டிக் வண்டியை ரிமோட் மூலம் உள்ளே செலுத்தி வெளியே வரவேண்டும். அதற்காக கால அளவு முறைப்படி பரிசுகள் வழங்கப்பட்டன. வயது மற்றும் கால அடிப்படையில் ஆறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன இதில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திண்டுக்கல், நத்தம், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர் உள்ளிட்ட மாவட்ட முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Next Story