ரயில்வே சுரங்க சாலையில் டயர் வெடித்து நின்ற அரசு பேருந்து!
Thoothukudi King 24x7 |27 Aug 2024 3:21 AM GMT
கோவில்பட்டி ரயில்வே சுரங்க சாலையில் அரசு பேருந்து டயர் வெடித்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில்வே சுரங்க பால சாலையில் டயர் வெடித்து பழுதாகி நின்ற அரசு பஸ் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனால், பயணிகள் மாற்று பேருந்து மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். பின், டெப்போ பணியாளர்கள் டயரை மாற்றிய பின், பேருந்து புறப்பட்டு சென்றது. பிரேக் டவுன், இயந்திர கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் அடிக்கடி அரசுப் பேருந்துகள் பாதி வழியில் நிற்பது தொடர் கதையாகிறது என்று பயணிகள் புலம்பிச் சென்றனர்.
Next Story