வேணுகோபால சுவாமிக்கு கிருஷ்ணன் அலங்காரம்

வேணுகோபால சுவாமிக்கு கிருஷ்ணன் அலங்காரம்
கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு சின்னாளபட்டி லெட்சுமிநாராயணசுவாமி கோவிலில் உள்ள வேணுகோபால சுவாமிக்கு கிருஷ்ணன் அலங்காரம்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பிரிவில் உள்ள பிருந்தாவன தோப்பு என்று அழைக்கப்படும் ஸ்ரீலெட்சுமிநாராயணசுவாமி கோவிலில் உள்ள வேணுகோபால சுவாமிக்கு கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு பால், தயிர், தேன், இளநீர், கரும்புச்சாரு, சந்தனம், பன்னீர், சொர்னம், புஷ்பம், திரவியப்பொடி உட்பட 16வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு மயில் இறகுடன் கூடிய கிருஷ்ணன் அலங்காரம் செய்திருந்தனர். சின்னாளபட்டி, செட்டியபட்டி, காந்திகிராமம், அம்பாத்துரை, கலிக்கம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, உட்பட பல கிராமங்களிலிருந்து நூற்றுகணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசம் செய்த வண்ணம் இருந்தனர். சுவாமிக்கு ஜிலேபி, முருக்கு, சீடை, சம்பா சாதம், அவல்பொறி, பருப்பு பாயாசம், சக்கரை பொங்கல், மற்றும் பழவகைகள் படைக்கப்பட்டு தீப ஆராதனை காண்பித்த பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சுவாமிக்கான அலங்காரத்தை ஜெகநாத குருக்கள் மற்றும் தியாகராஜன் குருக்கள் செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஅழகர் தேவஸ்தான கமிட்டியை சேர்ந்த பரம்பரை நாட்டாண்மை கே.ராஜேஸ், மேனேஜிங் டிரஸ்டி எஸ்.வி.சண்முகம், செயலாளர் சுப்பையா, பொருளாளர் சாந்தகுமார், இணைத்தலைவர் ஓ.பால்ராஜ், உதவித்தலைவர் கே.கணகராஜ், இளைஞர் அணியை சேர்ந்த தேவா, தலைமையிலான விழா கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story