பேரூராண்டான் கோயிலில் சிறப்பு பூஜை

பக்தி
ஆலங்குடி பேரூராண்டான் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆதிகால பைரவர் மற்றும் காசி கால பைரவருக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நேற்று நடைபெற்றது. பின்னர் உற்சவர் பைரவர் கோவில் உள் பிரகாரத்தில் ஆலய உலா வந்து சிறப்பு விபூதி அலங்காரத்தில் பைரவர் காட்சியளித்தார். இதில், அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று பைரவரை தரிசித்து சென்றனர்.
Next Story