தேவையூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா
Perambalur King 24x7 |27 Aug 2024 4:37 AM GMT
தேர் திருவிழா
பெரம்பலூர் அருகே தேவையூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் திருத்தேர் விழா, திரளான பக்தர்கள் அளவு குத்தி நேர்த்திக்கடன் செய்து தேரினை வடம் பிடித்து இழுத்தனர். ..... பெரம்பலூர் அருகேயுள்ள தேவையூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில். பிரசித்தி பெற்ற இந்த திருக் கோயிலில் ஆக 9ம் தேதி பூச்சொரிதலோடு தேர் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி காப்பு கட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி ஊர்வலம் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. அருள்மிகு மகா மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மலர் அலங்காரத்துடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக அளவு குத்தி நேர்த்திக்கடன் செய்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர், இந்த தேர் திருவிழாவில் தேவையூர் மட்டுமின்றி, தம்பை, வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம் மற்றும் பிரம்மதேசம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story