பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்த பாரதிய ஜனதா நிர்வாகி 

பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்த பாரதிய ஜனதா நிர்வாகி 
வில்லுக்குறியில்
குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் செல்லம் மகன் ஆனந்த் (38). இவர் அந்த பகுதியில் பழக்கடை நடத்தி வந்தார். பாரதிய ஜனதா கட்சியின் பத்மநாபபுரம் நகர ஓபிசி அணி பொருளாளராகவும் இருந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.         தற்போது வில்லுக்குறி பகுதியில் தனியாக  வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ஆனந்த்  வழக்கமாக டீ குடிக்கும் கடைக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் அவரது வீட்டில் சென்று பார்த்துள்ளனர். பலமுறை அவரை அழைத்தும் சத்தம் எதுவும் வீட்டிலிருந்து வரவில்லை. கதவை தட்டி திறக்காததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.         அப்போது படுக்கை அறையில் கட்டில் அருகே தரையில் ஆனந்த் இறந்த நிலையில் கிடந்துள்ளார். சட்டை அணியாமல் லுங்கி மட்டும் அணிந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து இரணியல் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் சென்ற போலீசார் ஆனந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம்  அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.        ஆனந்த் மாரடைப்பால்  இறந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story