கிருஷ்ண ஜெயந்தி விழா மாறுவேட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர்

கிருஷ்ண ஜெயந்தி விழா மாறுவேட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர்
கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமடைந்த குழந்தைகளுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்
கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சாய்பாபா கோவிலில் மாறுவேட போட்டி நடைபெற்றது குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகளை வழங்கிய அமைச்சர். தாராபுரம் சாய்பாபா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இயலாதவர்களை தேடி என்ற உதவி சேவை திட்டத்தின் ஆறாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. விழாவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகளுக்கு மாறுவேட போட்டி நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமடைந்து கலந்து கொண்டு கிருஷ்ணரை வழிபட்டனர். அதன் பிறகு நடைபெற்ற நடன போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் N. கயல்விழி செல்வராஜ், தாராபுரம் நகரக் கழகச் செயலாளர் ,S.முருகானந்தம் , தாராபுரம் நகர மன்ற தலைவர் கு.பாப்புக்கண்ணன் போட்டியில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன் பிறகு அங்கு உள்ள குழந்தைகளுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானத்தை அமைச்சர் துவக்கி வைத்து உணவுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர அவை தலைவர் கதிரவன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ராஜேந்திரன், நகர மன்ற உறுப்பினர் யூசப் மற்றும் இன்னால் முன்னால் திமுக நிர்வாகிகள், திருஞானசம்பந்தர் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் எம் ஜெய்லானி, சமூக நலத்துறை கரூர் மாவட்ட திட்ட அலுவலர் ஜி நாகலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story