தாராபுரம் அரோபிந்தோ வித்யாலய பள்ளியில் பாரம்பரிய பண்பாட்டுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.
Dharapuram King 24x7 |27 Aug 2024 6:34 AM GMT
தாராபுரம் அரோபிந்தோ வித்யாலய பள்ளியில் பாரம்பரிய பண்பாட்டுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.
தாராபுரம் அரோபிந்தோ வித்யாலய பள்ளியில் பாரம்பரிய பண்பாட்டுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். தாராபுரத்தில் உள்ள அரோபிந்தோ வித்யாலயா பள்ளியில் கோகுலாஷ்டமி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணரைப் போலவும் இராதையைப் போலவும் அழகான உடை அணிந்து மாணவர்கள் நடனமாடி இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். தங்கள் குழந்தைகளின் அழகிய நடனம், இசை மற்றும் நாடகத்தைக் கண்டு, பெற்றோர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். மழலைச் செல்வங்களே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். நிறைய விளையாட்டுப் போட்டிகள் பெற்றோர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெற்றோர்களும் குழந்தைகளும் அப்போ போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். குழந்தைகளும் பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கோகுலாஷ்டமியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Next Story