தாராபுரம் அருகே அரசு பள்ளியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ‘கிளித்தட்டு’ பயிற்சி

தாராபுரம் அருகே அரசு பள்ளியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ‘கிளித்தட்டு’ பயிற்சி
தாராபுரம் அருகே அரசு பள்ளியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ‘கிளித்தட்டு’ பயிற்சி
தாராபுரம் அருகே அரசு பள்ளியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ‘கிளித்தட்டு’ பயிற்சி தாராபுரத்தை அடுத்த சின்னக்காம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான 'அட்யா பட்யா' என்ற கிளித்தட்டு பயிற்சி முகாம் நேற்று தொடங் கியது. இதில் தாராபுரம்,காளி பாளையம், ராமபட்டினம், குளத்துப்பாளையம், தாசப்பட்டி, கோவிந்தா புரம்,சத்திரம், சின்னக்காம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் காலை 7 மணி முதல் 12 மணி வரை இப்பயிற்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அட்யா பட்யா அசோசியேஷன் திருப்பூர் மாவட்ட செயலாளர் குமரேசன் கூறியதாவது, கோ-கோ போட்டிக்கு பயன் படுத்தப்படும் ஆடுகளத்தை போன்றே அட்யா பட்யா ஆடுகளம் தோற்றம் அளிக்கும். அதில் 9. வீரர்கள் அமர்ந்துகொண்டு விளையாடுவார்கள். அட்யா பட்யா விளையாட்டில் 9 வீரர்கள் நின்று. கொண்டு இருப்பார்கள். ஆனால் இதை வீரர்கள் ஏதேனும்ஒரு புறம் பார்த்தபடியே விளையாடுவார்கள். இந்த விளையாட்டுக்கு மொத்தம் 12 வீரர்கள் தேவை, 9 பேர் பிரதான வீரர்களாக இருப்பார்கள். 3 பேர் மாற்று வீரர்களாக இருப்பார்கள் போட்டியை இரு வகையாக பிரிப்பார்கள். ஒன்று ரெய்டு செல்வது, மற்றொன்று தற்காப்பு (பிடிப்பது) ஆட்டம், முதலில் ரெய்டு செல்வதற்காக 5 வீரர்கள் வருவார்கள். இவர்கள் ஆட்டமிழந்தால் அடுத்ததாக 4 வீரர்கள் களமிறங்குவார்கள். ஓர் இன்னிங்ஸ் 7 நிமிடங்கள் நடைபெறும். இதில் ரெய்டு செல்பவர்கள் எத்தனை புள்ளிகளை எடுக்கிறார்களோ அதை அவர்கள், டிபன்ஸ் விளையாடும்போது எதிரணியை எடுக்க விடாமல் தக்க வைக்க போராட வேண்டும். எதிரணியினர் அவர்களை விட ஒரு புள்ளி கூடுதலாக எடுத்து வெற்றி பெற வேண்டும். மொத்தம் 3 செட் நடைபெறும். இதில் 2 செட்டை கைப்பற்றுபவர்கள் வெற்றி பெறுவார்கள். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று சின்னக்காம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சிறந்த திறனை வெளிப்படுத்தும் மாணவ, மாணவிகள். 14, 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் சீனியர் பிரிவுகளில் திருப்பூர் மாவட்ட அணிக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்படுவர், என்றார்.
Next Story