கரூரில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
Karur King 24x7 |27 Aug 2024 7:10 AM GMT
கரூரில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
கரூரில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட மையம் சார்பில் மாவட்டத் தலைவர் கருணாகரன் தலைமையில் 5- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அரசு செலவில் கைபேசி, சிம்கார்டு, இணையதள சேவைக்குரிய பணம் வழங்காமல், களஞ்சியம் செயலியில் விடுப்பு மற்றும் GPF விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மிரட்டும், சர்வாதிகார போக்கை கண்டித்தும், களஞ்சியம் செயலியில் அரசு ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் விடுப்புகள் GPF விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், அரசு விதிகளுக்கு முரணாக கருவூலத்துறை ஆணையர் அதிகார மிரட்டல் விடுத்ததை கண்டித்தும் , ஊதியம் வழங்கும் அலுவலர்களை அதிகாரம் அற்றவர்களாக மாற்ற முயற்சி செய்து வருவதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் சிங்கராயன்,மாவட்ட இணைச் செயலாளர் மகேந்திரன் மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story