இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிக்கும் பணி தீவிரம்.
Paramathi Velur King 24x7 |27 Aug 2024 7:34 AM GMT
பரமத்தி வேலூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிக்கும் பணி தீவிரம்
பரமத்தி வேலூர்,ஆக:27- நாமக்கல் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர்,கொல்லிமலை,நாமக்கல்,பள்ளிபாளையம்,திருச்செங்கோடு மற்றும் வையப்பம்மலை ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான விநாயகர் சிலைகள் பரமத்தி வேலூர் பகுதியில் செய்யப்பட்டு தயாரிக்கும் பணியில் உள்ளது. இதில் சிவன்,பார்வதி உடன் கூடிய விநாயகர் சிலை,சித்தி,புத்தி விநாயகர்.மயில்,காமதேனு,ஆஞ்சநேயர்,சிங்கம்,அன்னப்பறவை, குதிரை,புலி,சிங்க வாகனங்கள் கொண்ட விநாயகர் மற்றும் புல்லட்டில் அமர்ந்து செல்லும் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் கொண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Next Story