ஆட்டோவை திருடிச் சென்ற மர்ம நபர்கள்.

X
Paramathi Velur King 24x7 |27 Aug 2024 1:40 PM ISTநல்லூர் அருகே ஆட்டோவை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.
பரமத்திவேலுார், ஆக 27- சேலம் மாவட்டம் மேச்சேரியைசேர்ந்த வீரபுத்திரன் மகன் ராமச்சந்திரன் (30) . இவர் பூச்செடி வியாபாரி, இவர் நேற்று முன்தினம் நல்லூரில் வார சந்தையில் சரக்கு ஆட்டோவில் பூச்செடிகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார். அப்போது அருகில் இருந்த மர்ம நபர்கள் ராமச்சந்திரனிடம் நைசாக பேசி கழுத்தில் பச்சை குத்திக் கொள்கிறீர்களா என கேட்டுள்ளனர். ராமச்சந்திரன் சம்மதம் தெரிவிக்க கழுத்தில் பச்சை குத்தியுள்ளனர். சிறிது நேரத்தில் ராமச்சந்திரன் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு எழுந்து பார்த்தபோது வியாபாரத்துக்கு கொண்டு வந்த பூச்செடிகளுடன் மினி ஆட்டோ காணாமல் போனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் நல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்கள் திருடிச் சென்ற சரக்கு ஆட்டோவையும் நபர்களையும் தேடி வருகின்றனர். வாரச்சந்தையில் மயஅப்பகுதியில் பரபரப்பை வருகின்றனர். வாரச்சி அதனை திருடிய மரம் நபாகளையும் மிக ஏற்படுத்தியுள்ளது.
Next Story
