நன்னிப்பாறை அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத மற்றொரு டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

நன்னிப்பாறை அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத மற்றொரு டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
நன்னிப்பாறை அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத மற்றொரு டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, காணியாளம்பட்டி அருகே உள்ள கனிகளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் வயது 52. இவர் ஆகஸ்ட் 23ஆம் தேதி இரவு 7:30- மணி அளவில், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் நன்னிப்பாறை இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, அதே சாலையில் வேகமாக வந்த மற்றொரு அடையாளம் தெரியாத டூவீலர், இளங்கோவன் ஓட்டிய டூ வீலர் மீது மோதிவிட்டு, நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில் இளங்கோவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த இளங்கோவனின் மகள் காணியாளம்பட்டியைச் சேர்ந்த நாகராஜன் மனைவி மதி வயது 28 என்பவர், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக மோதி விட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர் யார்? என்று கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.
Next Story