பெரியதள்ளப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயம்

பெரியதள்ளப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயம்
ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பகுதியில் பெரும்பரம் ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரிய தள்ளப்பாடி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் மாணவ மாணவிகள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் காலை 9 மணி அளவில் பள்ளிக்கு வந்த அதே பகுதியை சார்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தோஷ், வெங்கடேஷ், மணிகண்டன், ஆகிய மூவரும் 11-ம் வகுப்பறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேற்கூறையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் மூன்று மாணவர்களுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது இதனை அடுத்து அங்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களை மீட்டு சிங்காரப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது தொடர்ந்து சம்பவத்தை அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பு. இந்த கட்டிடம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. அந்த கட்டிடத்தினை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு அவர்கள் ஆய்வு செய்து சென்றது குறிப்பிடத்தக்கது.
Next Story