கருவேப்பிலங்குறிச்சி போலீசாரை கண்டித்து விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கருவேப்பிலங்குறிச்சி போலீசாரை கண்டித்து விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ஒரு நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
விருத்தாசலத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் கதிரவன் என்பவர் மீது கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் மற்றும் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ஒருதலைப் பட்சமாக வழக்கு பதிவு செய்து கைது செய்ததை கண்டித்து விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பார் அசோசியேஷன் தலைவர் சாவித்திரி செந்தில் குமார் தலைமை தாங்கினார். அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சதீஷ்குமார், சங்கரய்யா, ராம செந்தில், பழனிமுத்து, சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல்கள் சரவணன், மணிகண்டராஜன், மோகன், காந்தி, விஸ்வநாதன், புஷ்பதேவன், அசோக்குமார், ரங்கநாதன், அப்துல்லா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story