ராமநாதபுரம் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டமானது ஒன்றிய குழு தலைவர் புல்லாணி தலைமையிலும், வட்டார வளர்ச்சி ஆணையர் ராஜேஸ்வரி,வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டை இளங்கோவன் ஒன்றிய குழுவின் துணைத் தலைவர் சிவலிங்கம் முன்னிலையிலும் அவர்களை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) விஜயகுமார் வரவேற்றார்.61 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. பெரியபட்டினம் ஊராட்சியில் தற்போது நிலவும் தண்ணீர் பிரச்னையை போக்க அங்குள்ள கப்பலாறு, சாலைவலசை ஊரணிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காஞ்சிரங்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் மக்களுக்கு சரியான முறையில் சென்று சேரவில்லை எனவும் ஒன்றிய கவுன்சிலர்கள் வாயிலாகவும், மாயாகுளம் ஊராட்சி செயலர் பணியில் அலட்சியம் காட்டி வருவதால் இணைய தள வருவாய் வரி அச்சிட்ட ரசீது மூலம் மக்களிடம் வசூலிக்கப்படும் முறைகேட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என துணை தலைவர் சிவலிங்கம் பேசினார். கூட்டத்தின் இறுதியாக நன்றியுரை சொல்லி முடிக்கப்பட்டது.
Next Story