மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த நபரை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த போலீசார்
Perambalur King 24x7 |27 Aug 2024 12:32 PM GMT
மாவட்ட எஸ்பி
மனநலம் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் பகுதியில் சுற்றித் திரிந்த நபரை மீட்டு அவரின் உறவினருடன் அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த நாராயணன் (65) என்ற நபருக்கு விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனை பெரம்பலூரில் சிகிச்சை பெற்று வந்த நபரை சிகிச்சைக்கு பின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து கடந்த 22.11.2023 அன்று மனநலம் பாதிக்கப்பட்ட நபரை பெரம்பலூர் வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா அவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மனநல மருத்துவர் அசோக் வேலா கருணை இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 27.08.2024 -ம் தேதி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நாராயணனின் மகன் கலைசெல்வன் (39) என்பவரிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மருதமுத்து, சித்ரா, பெண் தலைமைக் காவலர் லீலாவதி மற்றும் வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா ஆகியோர்களால் நல்லமுறையில் ஒப்படைக்கப்பட்டார். இச்செய்தியறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா மேற்படி நபரை நல்லமுறையில் உறவினரிடம் ஒப்படைக்க உதவிய அனைவரையும் வெகுவாக பாராட்டினார்கள்.
Next Story