நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மறியல்
Nagercoil King 24x7 |27 Aug 2024 12:43 PM GMT
100-க்கும் அதிகமானோர் கைது
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், மற்ற துறைகளில் வழங்குவது போல் மருத்துவ காப்பீடு வழங்கப்பட வேண்டும், பென்ஷனை அரசு ஏற்று நடத்த வேண்டும், போக்குவரத்து துறையில் பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும், தனியார் மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் இன்று தமிழக முழுவதும் போராட்டம் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ராணி தோட்டத்தில் உள்ள போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார் செயலாளர் சுந்தர்ராஜ் முன்னிலை வைத்தார். முன்னாள் எம்.பி பெல்லர்மின் உட்பட பலர் போராட்டத்தை விளக்கி பேசினர். இந்த மறியல் போராட்டத்தில் நிர்வாகிகள் உட்பட ஏராளம் பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story