முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்கா செல்வதால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது- அதிமுக மாஜி அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு!
Madurai King 24x7 |27 Aug 2024 12:58 PM GMT
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்கா செல்வதால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது- அதிமுக மாஜி அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு!
அமெரிக்காவுக்கு முதலமைச்சர் போவதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படுமா? என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது வெளிநாடு செல்வதால் வேலைவாய்ப்பு முதலீடு வந்து விட்டதாக கூறுகிறார்கள் ஆனால் வறுமை ஒழியவில்லை வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை இங்கிருந்து வெளிநாடு சென்று இங்கிருந்து தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு வர சொல்லி இருவரும் கையெழுத்து போட்டு போஸ் கொடுக்கிறார்கள் ஏமாற்று வேலையாக இருக்கிறது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு மக்களுடன் முதல்வர் என்று சொன்னால் இதுவரை வீட்டோடு முதல்வராக இருந்தாரா? அதிமுக ஆட்சி காலத்தில் மக்களை தேடி அரசு 65 லட்சம் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்ட திட்டத்தை பெயரை உல்டா பண்ணி மக்களோடு முதல்வர் என வைத்துள்ளனர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி பேரையூர் பேரூர் கழகத்தின் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பேரையூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் முன்னதாக டி.குன்னத்தூரில் அமைந்துள்ள அம்மா கோவிலில் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி திருவுருவ வெங்கல சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்புரையாற்றியதாவது; முதலீடு எல்லாம் ஈர்த்து வந்ததாக சொன்னார்களே அதன் மூலமாக ஒருத்தருக்கு வேலை கிடைக்கவில்லை எந்த செய்தியும் வரவில்லை அமெரிக்காவுக்கு முதலமைச்சர் போவதனால் கவலையில்லை அவர் போவதால் ஏதாவது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படுமா என்பதுதான் தமிழ்நாட்டின் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது அதன் மூலமாக வேலை வாய்ப்பு வந்துவிட்டது என கூறுகிறார்கள் முதலீடு வந்துவிட்டது எனக் கூறுகிறார்கள் தொழிற்சாலைகள் எல்லாம் பெருகி விட்டதாக கூறுகிறார்கள் ஆனால் வறுமை ஒழியவில்லை வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை இப்போது மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை வைத்திருக்கிறார்கள் மக்களோடு முதல்வர் என்று சொன்னால் இதுவரை வீட்டோடு முதல்வராக இருந்தாரா என்ற சந்தேகம் இருக்கிறது முதல்வர் என்று சொன்னால் மக்களோடு தான் இருக்க வேண்டும் நேற்று வரை வீட்டோடு முதல்வரா மக்களோடு முதல்வர் என்ற விளம்பரம் இருந்தது ஆடம்பரம் இருந்தது ஆனால் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை அதிமுக ஆட்சி காலத்தில் மக்களைத் தேடி அரசு 65 லட்சம் மனுக்களுக்கு காலையில் பெற்ற மனுகளுக்கு மாலை தீர்வு கண்ட நிர்வாக புரட்சி அம்மா திட்டத்தில் நடந்தது அந்த பெயரை உல்டா பண்ணி மக்களோடு முதல்வர் என வைத்துள்ளார்கள் இந்த பெயர் வைப்பதில் ரூம் போட்டு யோசிக்கிறார்களா என தெரியவில்லை. பெயர் மட்டும் விதவிதமாக வைக்கிறார்கள் தாலிக்கு தங்கம் மடிக்கணினி கறவை மாடுகள் திட்டத்தை ஏனென்றால் அம்மா கொடுத்த திட்டம் அமெரிக்காவிற்கு செல்ல தயாராக இருக்கும் முதலமைச்சர் அவர்களே ஏற்கனவே சென்று வந்த சுற்றுலா பயணத்தில் ஒரு திட்டங்கள் கூட நிறைவேற்றப்படவில்லை மு க ஸ்டாலின் இங்கிருந்து வெளிநாடு சென்று இங்கிருந்து தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு வரச் சொல்லி அங்கே இருவரும் கையெழுத்து போட்டு போஸ் கொடுக்கிறார்கள் வெளிநாட்டு முதலீடு கிடைத்தது என்று இரண்டு பேரும் இங்கே தானே இருந்தீர்கள் இங்கே முடித்து இருந்தால் அரசிற்கு செலவாவது மிச்சமாய் இருக்கும் எல்லாமே ஏமாற்று வேலையாக இருக்கிறது என சிறப்புரையாற்றினார்.
Next Story