ராசிபுரம் அருகே தனியார் பேருந்து பஸ் நிறுத்தத்தில் நிற்கவில்லை என கூறி கிராம மக்கள் பேருந்து வழிமறித்து போராட்டம் ..
Rasipuram King 24x7 |27 Aug 2024 1:27 PM GMT
தனியார் பேருந்து பஸ் நிறுத்தத்தில் நிற்கவில்லை என கூறி கிராம மக்கள் பேருந்து வழிமறித்து போராட்டம் ..
சேலத்தில் இருந்து தனியார் பேருந்தில் பயணம் மேற்கொண்ட பெண் பயணி ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இறங்குவதற்காக பயணச்சீட்டு எடுத்த நிலையில் அங்கு பேருந்து நிற்காது என கூறியதால் கிராம மக்கள் பேருந்து வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் தனியார் பேருந்துகளும் நின்று செல்ல வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இந்த நிலையில் உத்தரவிட்டும் பல பேருந்துகள் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் நிற்காமல் சென்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மசக்காளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பரிமளா சேலத்தில் இருந்து நாமக்கலை நோக்கி செல்லும் தனியார்(விநாயக) பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இறங்குவதற்காக பயண சீட்டு எடுத்துள்ளார். ஆனால் பேருந்து நடத்துனர் பேருந்து அங்கு நிற்காது என கூறியதால் பெண் பயணி தனது உறவினரிடம் தகவல் தெரிவிக்கவே 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையை அருகே வந்த பேருந்தை வழிமறைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் பேருந்து நிற்காமல் செல்வது மிக வருத்தமாக உள்ளதாகவும்,அதே போல தனியார் பேருந்துகள் வரும் வழி தடங்களில் பார்சல் வாங்குவதற்காகவும், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நின்று வருகின்றனர். ஆனால் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் மட்டும் ஏன் நிறுத்துவதில்லை என பெண் பயணி ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.பின்னர் வெண்ணந்தூர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கிராம மக்கள் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர். பேருந்தை வழி மறைத்ததால் சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரை நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டுச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story