நீர் வரத்து குறைந்து வரும் வைகை ஆறு
Andippatti King 24x7 |27 Aug 2024 1:36 PM GMT
மழை இல்லாததால் மூலை வைகை ஆற்று பகுதிகளில் நீர்வரத்து இல்லை
தேனி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக ஆங்காங்கே மழை பெய்தது .இதே போல் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள மூலை வைகை ஆற்றுப் பகுதிகளில் மழை பெய்ததால் வைகை ஆற்றில் நீர்வரத்து வர தொடங்கியது . வைகை அணையின் நீர் நீர்மட்டமும் உயர்ந்தது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக மூலை வைகையாற்று பகுதிகளும் தற்பொழுது மழை இல்லாத காரணத்தினால் நீர்வரத்து தற்பொழுது இல்லை .மேலும் முல்லைப் பெரியாறு ஆற்றிலும் தற்பொழுது நீர்வரத்து குறைந்து வரும் நிலையில் வைகை அணையில் உள்ள நீர்மட்டம் தற்பொழுது குறைந்து வருகிறது
Next Story