கம்மாபுரத்தில் பெண் அடித்துக் கொலை
Virudhachalam King 24x7 |27 Aug 2024 2:37 PM GMT
கள்ளக்காதலன் கைது
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர் மனைவி வேம்பு (வயது 34), செங்கல் சூளை தொழிலாளியான இவர் விருத்தாசலம் பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இவரை காணவில்லை என இவருடைய உறவினர்கள் வேம்பு செல்போன் எண்ணுக்கு போன் செய்துள்ளனர். அப்போது கம்மாபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்த சின்னசாமி மகன் சிவா என்பவர் போனை எடுத்து எனது வீட்டில் வேம்பு பிணமாக கிடக்கிறாள், அவளை நான் கொலை செய்து விட்டேன் என கூறியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான கம்மாபுரம் போலீசார் சிவா வீட்டில், வேம்பு அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இந்நிலையில் வேம்பு குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரது பிரேதத்தை பார்த்து கதறி அழுதனர். உடன் போலீசார் வேம்பு பிரேதத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் போலீசார் சிவா எங்கிருக்கிறார் என தேடிய போது அவர் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் குடிபோதையில் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சிவாவை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து வேம்புவை சிவா அடித்து கொலை செய்தாரா? வேம்புவிற்கும் சிவாவுக்கும் என்ன தொடர்பு, என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது சிவாவிற்கு திருமணம் ஆகவில்லை என்பதும், வேம்பு சிவா இருவரும் கரும்பு வெட்ட சென்றபோது கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேம்பு, சிவா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார். அப்போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சிவா வேம்புவை தலையில் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். மது போதையில் கார்மாங்குடி பகுதியில் இருந்த சிவாவை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
Next Story