மதுரையில் அகில இந்திய கட்டுனர் சங்கம் சார்பாக மூன்று நாட்கள் நடைபெற உள்ள மாபெரும் கட்டுமான கண்காட்சி*
Sholavandan King 24x7 |27 Aug 2024 2:54 PM GMT
கண்காட்சி அமைச்சர்கள்,மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சி மேயர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து முன்னோர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள செய்தியாளர் அரங்கில் அகில இந்திய கட்டுனர் சங்கம் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.இந்நிகழ்வில் வருகிற 30,31 செப் 1 ல் மூன்று நாட்கள் சுமார் 5000 கட்டுமான வல்லுநர்கள் சங்கமிக்கும் மாபெரும் கட்டுமான கண்காட்சி அகில இந்திய கட்டுனர் சங்கம் மதுரை மையம் சார்பாக பில்ட் எக்ஸ்போ 2024 என்ற கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன இந்நிறுவனங்கள் அனைத்தும் தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் சம்பந்தமாக அனைத்து விதமான பொருட்களையும் கண்காட்சி கான திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் இதில் மக்கள் நலனுக்காகவும் மக்கள் முன்னேற்றத்திற்காகவும் தொழில் வளர்ச்சிக்காகவும் மாணவர் செல்வங்களின் நலனுக்காகவும் பொறியாளர்களுக்கான ஜாப் மேளா மக்களுக்காக வாஸ்து இலவச ஆலோசனை எம்எஸ்எம் இ தொழில் சிறப்பாக விளங்குவதற்காகவும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு என பல அம்சங்களுடன் இந்த கண்காட்சி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.இந்த கண்காட்சியை அமைச்சர்கள்,மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சி மேயர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து முன்னோர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.இந்நிகழ்வில் மதுரை மாவட்ட தலைவர் லயன் முருகேசன் கண்காட்சியின் தலைவர் மற்றும் செயலாளருமான சஞ்சய் உட்பட சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் பலருடன் இருந்தனர்
Next Story