புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை சார்பில்
Salem King 24x7 |27 Aug 2024 3:17 PM GMT
பொதுமக்களுக்கு நல உதவிகள்
அன்னை தெரசாவின் 114-வது பிறந்த நாளையொட்டி சேலம் அம்மாபேட்டையில் உள்ள புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நேற்று சேலம் தொங்கும் பூங்காவில் நடைபெற்றது. இதற்கு பாதிரியார் செந்தில்குமார் வரவேற்று பேசினார். அறக்கட்டளை நிறுவனர் விஜயபானு தலைமை தாங்கினார். இணை நிறுவனர் ஜெயப்பிரதா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஏழை, எளிய பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் நல உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து அறக்கட்டளை சார்பில், விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
Next Story