நீட் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவர்
Alangudi King 24x7 |27 Aug 2024 3:20 PM GMT
நீட் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவர்
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் 28 பேருக்கு எம்பிபிஎஸ் படிக்கவும், 5 பேருக்கு பிடிஎஸ் படிக்கவும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு கீழஇடையர் தெருவைச் சேர்ந்த பரமசிவம் – வள்ளியம்மாள் தம்பதியினரின் மகன் தருண், மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த நிலையில், நீட் தேர்வில் புதுக்கோட்டை மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களில், 633 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். இவருக்கு, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.
Next Story