மூதாட்டியிடம் தாலியை பறிக்க முயன்ற வாலிபர் கைது
Salem King 24x7 |27 Aug 2024 3:20 PM GMT
போலீசார் நடவடிக்கை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சேலம் 5 ரோடு பகுதியில வேலைக்காக நின்று இருந்தார். அப்போது 29 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் மூதாட்டியிடம் கொல்லப்பட்டியில் கட்டிட இருப்பதாக கூறி பஸ்சில் அழைத்து சென்றார். தளவாய்ப்பட்டி ஏரிக்கரை அருகே உள்ள ஒரு வீட்டை சுத்தம் செய்த போது அந்த வாலிபர் திடீரென மூதாட்டியை மிரட்டி காதில் உள்ள தோடு, தாலியை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மூதாட்டி இரும்பாலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற நபர் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 29) என்பது என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story