ஆரணியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஆரணி எம்.பி தரணிவேந்தன் பங்கேற்பு.

ஆரணி. ஆக. 27 ஆரணி அடுத்த மெய்யூரில் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் பேசினார்..
ஆரணி வடக்கு ஒன்றியம்-தெற்கு ஒன்றியம் சார்பில் மெய்யூர் கூட்டுரோடில் உள்ள சேமசுந்தரம் திருமண மண்டபத்திலும், மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியம்- மேற்கு ஆரணி தெற்கு ஒன்றியம் சார்பில் சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள எஸ் கே வி திருமண மண்டபத்திலும், ஆரணி நகர திமுக சார்பில் ஆரணி கொசப்பாளையம் பாஞ்சாலிஅம்மன் திருமண மண்டபத்திலும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன் தலைமை தாங்கினார். திமுக மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வருகை தந்த அனைவரையும் ஒன்றிய செயலாளர்கள் எம்.சுந்தர், துரை மாமது, எஸ்.மோகன், நகரசெயலாளர் ஏ.சி.மணி ஆகியோர் வரவேற்றனர். மேற்கண்ட கூட்டத்தில் எம்.பி.-எம்.எஸ்.தரணிவேந்தன் பேசியது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறோம். ஆனால் ஆரணி சட்டமன்ற தொகுதி மட்டும் 3 முறை திமுக தோல்வி அடைந்துள்ளது. அதற்கு காரணம் நமது கட்சிக்காரர்கள் தான், வரும் சட்டமன்ற தேர்தலில் ஆரணி தொகுதிக்கு நான்தான் பொறுப்பாளர். இம்முறை ஆரணி சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் என்னை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. வெற்றி பெற்றதால் தான் நாடாளுமன்றத்தில் அரிசி, பட்டு சேலை, ரயில் பாதை ஆகியவை குறித்து பேசினேன். ஆரணியில் அதிக அளவு அரிசி ஆலைகள் உள்ளது அதில் உள்ள தவிடுகளை கல்கத்தா, பம்பாய் ஆகிய பகுதிக்கு ஏற்றுமதி செய்கிறார்கள் அங்கு தவிட்டில் இருந்து ஆயில் தயார் செய்கின்றனர். தவிட்டில் இருந்து ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை ஆரணியில் அமைக்க நாடாளுமன்றத்தில் பேசுகிறேன். தமிழக முதல்வர் பொது மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளார் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு விரைவில் தரப்பட வுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார் இது உறுதி இவ்வாறு பேசினார். மேலும் இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்தனன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் கே.டி.இராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் குமரேசன், கொங்கராம்பட்டு மாதவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விமலா காசி, செல்வராஜ், புனித அலெக்ஸ், ஒன்றிய துணை செயலாளர் அன்பு வெங்கடேசன், மாவட்ட பிரநிதி எம்.எஸ்.ரவி, தகவல் தொழில் நுட்ப பிரிவு அமைப்பாளர் புஷ்பராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story