குளித்தலை அருகே வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பெரம்பலூர் நாடாளுமன்ற எம்.பி. அருண்நேரு

குளித்தலை அருகே வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பெரம்பலூர் நாடாளுமன்ற எம்.பி. அருண்நேரு
குளித்தலை அருகே வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பெரம்பலூர் நாடாளுமன்ற எம்.பி. அருண்நேரு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தமிழக அமைச்சர் நேரு மகன் அருண் நேரு. இன்று குளித்தலை அருகே கவுண்டம்பட்டி தென்கடை குறிச்சியில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்களித்த மக்களிடம் நன்றி தெரிவித்தார். அப்போது திராவிட முன்னேற்ற கழகம் கிளை அலுவலகம் முன்பு திமுக கட்சி கொடி ஏற்றப்பட்டது. பிறகு டாக்டர் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், நங்கவரம் பேரூர் கழக செயலாளர் அண்ணாதுரை, நங்கவரம் பேரூராட்சி துணைத்தலைவர் அன்பழகன், குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நன்றி தெரிவிக்கும் விளக்கு விழாவை சிறப்பித்தனர்.
Next Story