அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு
இந்துமதம் சார்ந்த கோவில்களை இடிப்பதில் நெருக்கடி காட்டும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு தாலுகாவிற்கு உட்பட்ட நத்தம் ரோடு பர்மா காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ நாக காளியம்மன் கோவிலை இடிப்பதற்கு திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சார்பாக பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. கிழக்கு தாலுகா அதிகாரத்திற்கு உட்பட்ட காஸ்மோ பாலிடன் கிளப் எதிரே ரோட்டின் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆரோக்கியமாதா கோவிலும், சிறுமலை பெரியூர் புறம்போக்கு நிலத்தில் மிகப்பெரிய ஆரோக்கியமாதா கோவிலும் , இரண்டலைப்பாறை அருகே ரோட்டின் மீது உள்ள சிலுவை திண்ணை , உள்ளிட்ட ஏராளமான பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் குறிப்பிட்ட உள்நோக்கத்தோடு திண்டுக்கல் பர்மா காலனியில் உள்ள ஸ்ரீ நாக காளியம்மன் கோவிலில் இடிப்பதற்கு அரசு மும்முரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இந்த அரசு அதிகாரிகளின் செயல் இந்துக்களுக்கும் பிற மதத்தைச் சார்ந்த மக்களுக்கும் இடையே மதக்கலவரத்தை தூண்டும் விதமாக அமையும் என்பதால் இந்துக் கோயிலை இடிக்கும் நடவடிக்கை நிறுத்தி வைக்கும்படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணி திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ராம்குமார் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் மனு அளித்தனர்.
Next Story