திருத்தணி முருகன் கோவிலில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் சாமி தரிசனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதலீடுகள் ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார் எவ்வளவு முதலீடுகள் ஏற்கனவே சென்ற வெளிநாட்டு பயணத்தில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச் செல்வன் பேட்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதலீடுகள் ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார் எவ்வளவு முதலீடுகள் ஏற்கனவே சென்ற வெளிநாட்டு பயணத்தில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச் செல்வன் பேட்டி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்தார் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச் செல்வன் அவருக்கு திருக்கோயில் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கினார்கள் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வைகைச் செல்வன் தெரிவித்தது தமிழகத்தில் அரசியலில் எல்கேஜி நிலையில் இருப்பவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர் அரசியலில் தகுதி இல்லாத தலைவராக உள்ளார் அரசியலில் படிப்படியாக உயர்ந்து தொண்டர்களால் உயர்த்தப்பட்டு எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவரை தவறாக குறைவாக பேசுவது எந்த விதத்தில் நியாயம் தமிழக பாஜக தலைவர் பதவி என்பது நியமன பதவி ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட தலைவர் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஒவ்வொரு நிலையாக இந்த நிலைக்கு வந்தவர் அவரைப் பற்றி இப்படி தரை குறைவாக பேசுவது அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது கஞ்சா, பழக்கம் அதிகரித்து உள்ளது நாளுக்கு நாள் சட்ட ஒழுங்கு பிரச்சனை தமிழகத்தில் அதிகரித்து உள்ளது இவை அனைத்திற்கும் தமிழக முதல்வர் பதில் கூற வேண்டும் தமிழகத்தில் இருந்து தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணங்கள் மூலமாக பல கோடி மதிப்பீட்டில் தொழில் நிறுவனங்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் தற்பொழுது மேலும் அமெரிக்க பயணம் மூலம் முதலீட்டு இருக்கும் வண்ணம் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார் ஆனால் அவரது பல வெளிநாட்டு பயணங்கள் குடும்பத்துடன் விமானங்களில் சென்றது சென்ற காலகட்டங்களில் பல்வேறு சர்ச்சைகளை நிலை நிறுத்தி உள்ளது ஆகையால் அவரது வெளிநாட்டு பயணங்கள் மூலமாக எவ்வளவு முதலீடுகள் தமிழகத்திற்கு ஈர்க்கப்பட்டுள்ளது என்பதை வெள்ளை அறிக்கையின் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் வெளிப்படுத்த வேண்டும் இந்த கேள்வியை தமிழக எதிர்க்கட்சி என்ற நிலையிலும் அதிமுக இதனை முன்வைத்து கேட்கும் கேள்வியாக முன்வைக்கின்றோம் என்று அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச் செல்வன் தெரிவித்தார்
Next Story