குமரி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது 

குமரி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது 
நாகர்கோவிலில்
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். முக்கியமாக அரசு அதிகாரிகள், பிரபலமானவர்களின் பிள்ளைகள் ஏராளம் பேர் படித்து வருகின்றனர்.     இந்த நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பெற்றோர் புகார் அளித்து, தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை பிடித்து எச்சரித்த பின்பும் மீண்டும் இந்த நிலை தொடர்வதாக தெரிய வந்தது.         இதையடுத்து சம்பவதினம் பள்ளியில் பெற்றோர் தரப்பில் மிகப்பெரிய பிரச்சனை வெடித்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் நாகர்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக விசாரித்து வந்தனர்.      இந்த நிலையில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் போலீசார்   8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த  ஆசிரியர் ராமச்சந்திர சோனி என்பவரை  கைது செய்து,  போக்சோ  உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story