மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா

X
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டையும், பழைய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை புதுப்பித்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கொண்டலாம்பட்டி பகுதியில் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி. வெங்கடாஜலம், பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க். எஸ்.வெங்கடாசலம், பகுதி செயலாளர்கள் பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

