கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்

கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்
விவசாயிகளுக்கு வழங்கிய உபரி நிலத்திற்கு பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக கூறி பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உள்ள பெரியம்மா பட்டி, இரவிமங்களம் மற்றும் ஆண்டிபட்டி நில உச்சவரம்புசட்டத்தின் கீழ் சுமார் 1500ஏக்கர் விவசாய நிலங்கள் ஏழை கூலித்தொழிலாலிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களுக்கு இதுவரை முறையாக பட்டா வழங்கவில்லை என குற்றச்சாட்டு இருந்துவந்தது. இந்நிலையில் இன்று பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் திடீரென தரையில அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட உபரிநிலங்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை என்றும், சிலருக்கு எஃப் பட்டா உண்டு.ஆனால் கணிணி பட்டா வாங்க முடியவில்லை. இந்த குளறுபடிகளை சரி செய்து அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் மற்றும் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தினர். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் விவசாய இடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story