அரசியலில் அண்ணாமலை ஒரு தற்குறி - கான்ஸ்டபிள் பதவிக்கு கூட தகுதி இல்லாதவர்
Tiruchirappalli King 24x7 |28 Aug 2024 4:32 AM GMT
அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி திருச்சி கூட்டத்தில் பேச்சு.
அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், முத்தரசநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கழக உறுப்பினர் உரிமை அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், பலூன் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அதிமுக உறுப்பினர் உரிமை அடையாள அட்டையை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி வழங்கினார். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி... இரண்டு நாட்களுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியினுடைய கூட்டத்தில் நம்முடைய கழக பொது செயலாளரை பற்றி இரண்டு கோடிக்கும் மேலாக இருக்கக்கூடிய உறுப்பினர்களைக் கொண்ட கழகத்தினுடைய தொண்டர்களுக்கு பாதுகாவலராக தாயாக இருந்து இந்த இயக்கத்தை வழிநடத்தக்கூடிய கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாரை பற்றி அவதூறாக கருத்துக்களை அங்கே வெளியிட்டார். அண்ணாமலை தமிழக அரசியலிலே ஒரு தற்குறி என்று சொன்னால் அது அண்ணாமலைதான் என்பதை அவருடைய பேச்சு எடுத்துக்காட்டிருக்கிறதுஎன்று இன்றைக்கு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பொதுமக்களும் அரசியல் விமர்சகர்களும் பல அரசியல் கட்சியினுடைய தலைவர்களும் கூறிக் கொண்டிருக்க கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அண்ணாமலை அரசியலில் ஒரு குழந்தைத்தனமாக இருக்கிறார் 1984, அப்போதுதான் அண்ணாமலையே பிறந்திருக்கிறார் ஆனால் நம்முடைய கழக பொதுச் செயலாளர் ஐம்பது ஆண்டு காலம் அரசியலில் அனுபவம் பெற்றவராக இன்றைக்கு 1984 ல் பிறந்த அண்ணாமலைக்கு இப்பொழுது வயது 40 தான் ஆகியிருக்கிறது அரசியல் அனுபவம் என்று பார்த்தால் அண்ணாமலைக்கு மூன்று வருடம் கூட இல்லை. இப்படிப்பட்டவர் 50 ஆண்டுகாலம் அரசியலிலே நெடிய அனுபவம் கொண்ட நம்முடைய கழகப் பொதுச் செயலாளரை விமர்சனம் செய்கிறார் என்று சொன்னால், அரசியலிலே அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி ஒரு குழந்தை அண்ணாமலை ஒரு குழந்தை மாதிரி அந்த கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் பற்றி பேசி இருக்கிறார். . சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, வாரிய தலைவராக, அமைச்சராக, நான்கரை ஆண்டு காலம் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக பச்சை இன்கில் கையெழுத்து போட்டவர் தான் நம்முடைய கழக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார். அண்ணாமலை நான் ஐபிஎஸ் ஐபிஎஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நீ எப்படி ஐபிஎஸ் படித்தியோ அது கடவுளுக்கு தான் வெளிச்சம். காவல்துறையை பொருத்தவரையில் அடிப்படை. பதவி என்று சொனால் அது கான்ஸ்டபிள் . . காவல்துறையில் கான்ஸ்டபிளாக இருக்குறது கூட தகுதி இல்லாத தரம் இல்லாதவர் தான் அண்ணாமலை . வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலோடு அண்ணாமலையினுடைய அரசியல் வாழ்க்கை முடித்து வைக்கப்படும். இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி பேசினார்.
Next Story