பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்

பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்
உற்சவம்
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம் நடந்தது.கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி வைபவம் நடந்தது. தொடர்ந்து நேற்று உறியடி உற்சவம் நடந்தது.இதையொட்டி, அதிகாலையில் மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், மந்தைவெளியில் வழுக்கு மரம் பிரதிஷ்டை நடந்தது. அதேபோல் உலகப்ப செட்டி கொல்லை தெருவில் உள்ள ராதா ருக்மணி சமேத நவநீதகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று உறியடி உற்சவம் நடந்தது. ராதா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் சர்வ அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருஷ்ண பக்தர்கள் உறியடி உற்சவத்தை துவக்கினர். வீதியுலா உற்சவம் தேரோடும் வீதிகள் வழியாக உறியடி உற்சவம் நடத்தப்பட்டு, மந்தைவெளியை அடைந்தது. அங்கு வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Next Story