பாமக நியமன மனு பெறுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம்

பாமக நியமன மனு பெறுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம்
பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆட்சியாளர்கள் தங்களை முன்னிலை படுத்துவதற்காக நடந்த மாநாடகத் தான் பார்க்கிறேன். நிலக்கோட்டையில் வன்னியர் சங்க மாநில செயலாளர் பேட்டி
பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டுக்கல் தெற்கு மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் தலைவர், செயலாளர் மகளிர் சங்க தலைவர், செயலாளர் பொறுப்புகளுக்கு நியமன மனு பெறுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மற்றும் கொடியேற்றம் நிகழ்ச்சி நிலக்கோட்டையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி, தஞ்சை மண்டல பொருப்பாளர் அய்யப்பன், தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் விஜயக்குமார், ராதாகிருஷ்ணன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன். உள்ஸ்ட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே ஊர்வலமாக தாரை தப்பட்டையுடன் வந்து கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: நாளைய தமிழகம் மருத்துவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவருடைய அறிவுறுத்தல் படியும் தமிழகம் முழுவதும சட்டமன்ற தொகுதி வாரியாக, தொகுதி தலைவர், செயலாளர், மகளிர் அணி தலைவர், செயலாளர், நியமனம் செய்வதற்கான மனுக்களை பெற்று, வந்து கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில், இன்று திண்டுக்கல் தெற்கு மாவட்டத்தின் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியின், செயலாளர், மகளிர் அணி தலைவர், செயலாளருக்கான மனுக்களை கொடுத்து, மனுக்களை பெற்று இருக்கின்றோம். அதை ஆய்வு செய்து எங்களுடைய மருத்துவ அய்யா அவர்களிடத்திலும், சின்னையா அவர்களிடதிலும் பரிந்துரை செய்ய இருக்கின்றோம். அவர்கள் நியமன கடிதங்களை வழங்கி, தமிழக த்தில் அரசியல் மாற்ற த்தையும், ஆட்சி மாற்றத்திற்குமான அடித்தளமாக இந்த பணியை செய்து கொண்டிருக்கிறார். 2026ல் ஒரு கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று எங்களுடைய மருத்துவர் சொல்லியிருக்கின்றார்கள் அந்த அடிப்படையில் திண்டுக்கல மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு இரண்டு மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கள் உள்ளது . மருத்துவர் அய்யாவை பொறுத்தவரை யார் தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்டுவார்கள் போராட்டங்களையும் நடத்தி மக்களுக்காக பாடுபடுபவர்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்காக அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வார்கள். தற்போது பழனியில் நடைபெற்ற முருகன் மாநாடு ஆட்சியாளர்களின் மாநாடாக நடைபெற்றது என தெரிவித்தார்.
Next Story