பெரம்பலூர் பெருமாள் கோவிலில் உரியடி திருவிழா
Perambalur King 24x7 |28 Aug 2024 4:44 AM GMT
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
பெரம்பலூர் நகரில் உள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று உரியடி விழா நடைபெற்றது இதில் பெருமாள் பூதேவி சமேத ஸ்ரீதேவியுடன் எழுந்தருளி நாலு கால் மண்டபம் உறி, பெரிய தெற்கு தெரு உறி, சின்னதெற்கு தெருஉறி,பழைய நகராட்சி அருகே உள்ள உறி இறுதியாக தேரடி அருகில் உறியடி விழாவை முடித்து பெருமாள் நான்கு மட விதி உலா வந்து சேவை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கோவிந்தா முழக்கம் விட பின் தொடர்ந்தனர் நிகழ்வில் செயல் அலுவலர் கோவிந்தராஜன் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், திருகோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story