திருக்கோவிலூரில் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
Thirukoilure King 24x7 |28 Aug 2024 8:14 AM GMT
கூட்டம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஸ்டாலின் மற்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்களின் அறிவிப்பின் பேரில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொது செயலாளரும், தமிழக உயர்கல்வி துறை அமைச்சருமான க.பொன்முடி மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பொன்.கெளதமசிகாமணி ஆகியோர்களின் அறிவுறுத்தலின் பேரில், விழுப்புரம் தெற்கு மாவட்டம், திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஆவிக்கொளப்பாக்கம் செளபாக்யா திருமண மண்டபத்தில் இன்று அவைத்தலைவர் தீனதயாளன் தலைமையில் நடைபெற்றது. இளைஞரணி அமைப்பாளர் பாலு என்கிற பாலமுருகன் வரவேற்றார் ,மேலிட பொறுப்பாளர்களாக மாவட்ட துணை செயலாளர்கள் திருக்கோவிலூர் நகரமன்ற தலைவர் முருகன்,இரா.கற்பகம் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வராஜ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு துணைப்பெருந்தலைவரும்,மாவட்ட திட்டமிடல் குழுவின் உறுப்பினரும், திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய செயலாளருமான மு.தங்கம் சிறப்புரை ஆற்றினார் .நிகழ்வில் திருக்கோவிலூர் நகர கழக செயலாளர் கோபிகிருஷ்ணன்,மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கலைஞர் டிவி சிவா, மாவட்ட,ஒன்றிய,நகர கழக நிர்வாகிகள்,கிளை செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள்,சார்பு அணியினர் மற்றும் கழகத்தினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கழகத்தலைவர் ஆக பதவியேற்று ஐந்து வருடங்களாகிய கழகத்தவைவர் அவர்களுக்கு பாராட்டுதல்களையும்,தொழில் புரிந்துணர்வு அயல்நாட்டு முதலீடுகளை ஈர்த்திட அமெரிக்கா பயணம் செய்துள்ள முதல்வருக்கு பாராட்டுதல்களையும், சென்னையில் நடைப்பெற உள்ள முப்பெரும் விழாவில் பெருந்திரளாக கலந்து கொள்ளுதல்,முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை கிளைகள் தோறும் எழுச்சியாக கொண்டாடுதல்,தெருமுனை பிரச்சாரங்கள் நடத்துதல்,மகளிரணி சேர்க்கை மற்றும் சார்பு அணிகளை வலுப்படுத்துதல்,2026 ஆம் ஆண்டில் சட்டமன்ற பொது தேர்தலில் சிறப்பாக பணியாற்றிட கழக ஆக்கப்பணிகளை செய்திடவும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
Next Story