வடுகபாளையம் புதூர் மற்றும் சித்தம்பலம் ஊராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்.
Palladam King 24x7 |28 Aug 2024 8:36 AM GMT
பொதுமக்களிடமிருந்து 750 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகபாளையம் புதூர் மற்றும் சித்தம்பலம் ஊராட்சி மக்களுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் வடுகபாளையம் புதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் மற்றும் சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் தேன்மொழி,வழக்கறிஞர் எஸ்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமை திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜ் துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு துறை சார்ந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை, வீட்டுமனை தடையில்லா சான்று, சாதி சான்றிதழ் போன்ற சேவைகளுக்காக மனு அளித்த பொது மக்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இம்முகாமில் பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிமேகலை அன்பரசன், பல்லடம் வட்டாட்சியர் ஜீவா, பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ்,மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பையன், பல்லடம் ஒன்றிய துணைச் செயலாளர் ஆட்டோ குமார் மாவட்ட பிரதிநிதி அன்பரசன், துரை முருகன்,மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சுப்பிரமணியன்,மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து 750 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
Next Story