ராமநாதபுரம் நடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |28 Aug 2024 9:28 AM GMT
காஞ்சிபுரங்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் மூன்றாம் நாளான இன்று வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சிரங்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் மூன்றாம் நாளான இன்று வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடந்தது. இவ்விழா வீரத்தமிழர் வடமாட்டு பேரவை மாநில துணைத்தலைவர் ஆதித்தன் தலைமையில் நடந்தது.விழாவை ராமநாதபுரம் தி. மு. க. மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். விழாவில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து 80 க்கும் மேற்பட்ட காளைகள் வரவழைக்கப்பட்டன. ஒரு காளையை பிடிக்க 9 மாடுபிடி வீரர்கள் நியமிக்கப்படுவர்.ஒரு காளையைப்பிடிக்க 20 நிமிடம் மட்டும் வழங்கப்படும இந்த நிமிடத்திற்குள் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடிக்கவில்லை என்றால் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு காளை உரிமையாளருக்கு பரிசு வழங்கப்படும். காளைகளை அடக்கினால் மாடுபிடி வீரர்களுக்கு பரிசு அளிக்கப்படும்.
Next Story