தே. அய்யம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

தே. அய்யம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
தே. அய்யம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை திறந்து வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம்,கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவர்மலை ஊராட்சியில் உள்ள தே. அய்யம்பாளையம் பகுதியில்,2023- 24 ஆம் ஆண்டு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை, இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் தேவர்மலை ஊராட்சி மன்ற தலைவர் நக்கீரன், துணைத் தலைவர் ரங்கராஜன், கடவூர் வட்ட வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கஸ்தூரி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய நாடக மேடை திறப்பு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, எம் எல் ஏ சிவகாமசுந்தரி இடம் ஊர் பொதுமக்கள் தங்கள் ஊர் குறைபாடுகளை மனுக்களாக எழுதி அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ சிவகாமசுந்தரி மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Next Story