ஆண்டிபட்டி பகுதியில் வாழை இலை கட்டு விலை உயர்வு
Andippatti King 24x7 |28 Aug 2024 10:27 AM GMT
வாழை இலை கட்டு உயர்வு ஒரு கட்டின் விலை ரூ 1000 விற்பனை காற்றின் வேகம் அதிகரிப்பால் வாழை இலைகள் சேதம் விவசாயிகளுக்கு நஷ்டம்
வாழை இலை கட்டு விலை உயர்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் புள்ளிமான்கோம்பை தெப்பம்பட்டி . ராஜகோபாலன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை சாகுபடி அதிக அளவு நடைபெற்று வருகிறது மேலும் கடந்த மாதம் ஆடி மாதம் முழுவதும் காற்றின் வேகம் அதிகரிப்பால் வாழை இலைகளில் சேதம் அடைந்தன .அதேபோல் ஆடி மாதத்தில் வாழை இலை கட்டு விலையும் குறைவாக இருந்தது. தற்பொழுது ஆவணி மாதம் பிறந்த நிலையில் முகூர்த்த தினங்கள் மற்றும் விசேஷ தினங்கள் கும்பாபிஷேகங்கள் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன .இந்நலையில் வாழையிலை கட்டு கடந்த மாதம் ரூ600 முதல் ரூ 800 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஒரு கட்டின் விலை தற்பொழுது ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .மேலும் வாழை இலை விலை உயர்வு இருந்தும் வாழை இலைகள் அனைத்தும் காற்றினால் கிழிந்த நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்
Next Story